காட்டுப் பறவைகளின் முட்டைகளை சேகரிப்பது சட்டவிரோதம்- 20,000 திர்ஹம் வரை அபராதம்
சுற்றுச்சூழல் நிறுவனம் அபுதாபி (EAD) வெளியிட்ட அறிவிப்பில், “அழகான” காட்டுப் பறவைகளைப் பாதுகாக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோடை காலம் தொடங்குவதால், அபுதாபி தீவுகள் வெப்பமான மாதங்களில் பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளன. சில தீவுகள் இந்த பருவத்தில் புலம்பெயர்ந்த டெர்ன்களின் முக்கிய இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக செயல்படுகின்றன.
காட்டு பறவைகளின் முட்டைகளை சேகரிப்பது சட்டவிரோதமானது. 1999 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண் (24)-ன் படி, காட்டுப் பறவைகளையும் அவற்றின் கூடுகளையும் வேட்டையாடுவது, பிடிப்பது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் 2,000 முதல் 20,000 வரை அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவற்றைப் பாதுகாப்பதும் நமது பொறுப்பு என்று அதிகாரிகள் நினைவூட்டினர். முட்டைகளை சேகரிப்பதைத் தவிர்க்குமாறும், எமிரேட் அரசாங்கத்திற்கு 800555 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்குமாறும் ஏஜென்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.