ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலீஃபா ஒளிர்ந்தது!
ஞாயிற்றுக்கிழமை மாலை, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தை ஒட்டி ஒலிம்பிக் சின்னம் மற்றும் அதன் ஐந்து வளையங்களின் வண்ணங்களால் ஒளிரச் செய்யப்பட்டது. ஜூன் 23, 1894 இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவிய பரோன் பியர் டி கூபெர்டினை ஒலிம்பிக் தினம் கெளரவிக்கிறது.
இந்த நிகழ்வைப் பற்றி, துபாயின் இரண்டாவது துணை ஆட்சியாளரும், துபாய் மீடியா கவுன்சிலின் தலைவருமான அஹ்மத் பின் முகமது பதிவிட்டுள்ளதாவது:- “இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் தினத்தை ஜூன் 23 அன்று ‘நகர்த்துவோம் மற்றும் கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளில் UAE உலகத்துடன் இணைந்து கொண்டாடுகிறது. விளையாட்டு சிறப்பை வளர்க்கும் சூழலை உருவாக்குவதன் மூலம் ஒலிம்பிக் இயக்கத்தை ஆதரிப்பதில் எங்கள் தலைமை உறுதியாக உள்ளது” என்றார்.
மேலும், நமது சமூகத்தில் விளையாட்டு வகிக்கும் முக்கிய பங்கை பிரதிபலிக்கும் ஒலிம்பிக் இயக்கத்தின் இலக்குகளை முன்னெடுப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.