நடிகர் தனுஷ் (Actor Dhanush), கேப்டன் மில்லர் என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம் செல்லும் பகுதியில் ஆயிரப்பேரி, மினாடி சேரி உட்பட்ட கிரமங்களில் படமாக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் இன்று (ஏப்.25) குண்டு வெடிப்பது போல் போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்படும்போது குண்டு மிகுந்த சப்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதிவாசிகள் அங்கு குவிந்தனர். மக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து படப் பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். உடனடியாக அந்த பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
நிலத்தின் உரிமையாளர் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப் படவில்லை. சம்பந்தப்பட்ட பகுதியில் ராணுவ வாகானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த 15 நாள்கள் தடையும் விதிக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் பல புதிய படங்களில் வேகமாக நடித்துவருகிறார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஆகையால் அணைத்து படப்பிடிப்பையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.