Site icon Tamil Gulf

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடல்

All parks in the Emirate of Sharjah are closed

வார இறுதியில் மோசமான வானிலை நிலவும் என்ற முன்னறிவிப்பு காரணமாக ஷார்ஜா எமிரேட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மார்ச் 8 வெள்ளிக்கிழமை முதல் பூங்காக்கள் மூடப்படும் என்று ஷார்ஜா நகராட்சி தெரிவித்துள்ளது.

வானிலை சீரடைந்தவுடன் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவில் நிலையற்ற வானிலை நிலவும் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.

Exit mobile version