2024-ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அபுதாபி முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ஆன்லைன் தரவுத்தளமான Numbeo தெரிவித்துள்ளது. அஜ்மான், துபாய் மற்றும் ராஸ் அல் கைமா உட்பட மற்ற மூன்று எமிரேட்ஸ் உலகளவில் முதல் ஆறு நகரங்களில் இடம்பெற்றுள்ளன.
அபுதாபி பாதுகாப்பு குறியீட்டில் 86.8% சிறந்ததாகவும், குற்ற அளவுகளில் 13.1% பெற்று கடைசியாகவும் இருந்தது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ள கராகஸ் 82.2% குற்ற அளவு மற்றும் 17.8% பாதுகாப்புடன் மிக மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது.
Numbeo அதன் குற்றக் குறியீட்டில் 329 நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது.
“குற்ற அளவுகள் 20க்குள் மிகக் குறைவாகவும், 20 முதல் 40 வரையிலான இடையில் குறைவாகவும், 40 மற்றும் 60 க்கு இடையில் மிதமானதாகவும், 60 மற்றும் 80 க்கு இடையில் அதிகமாகவும், 80 க்கும் அதிகமான குற்ற அளவுகள் மிக அதிகமாகவும் நாங்கள் கருதுகிறோம்,” என்று Numbeo இணையதளம் தெரிவித்துள்ளது.
“பாதுகாப்புக் குறியீடு என்பது குற்ற அளவுக்கு நேர் எதிரானது. நகரம் அதிக பாதுகாப்புக் குறியீட்டைக் கொண்டிருந்தால், அது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது,”என்று 331 நகரங்களை உள்ளடக்கிய பாதுகாப்புக் குறியீட்டைப் பற்றி Numbeo கூறினார்.