அமீரக செய்திகள்

அழுக்கு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் காரணமாக அபுதாபி உணவகம் மூடல்

சமையலறை மற்றும் சேமிப்பு பகுதிகளில் மோசமான சுகாதாரம் காரணமாக அபுதாபியில் ஒரு உணவகம் மூடப்பட்டது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் (Adafsa) படி, Mafraq Industrial City-ல் அமைந்துள்ள Khushab Darbar Restaurant, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பலமுறை மீறியது கண்டறியப்பட்டது.

“உணவு கையாளுதல் மற்றும் சேமிப்பு பகுதிகளில் மோசமான சுகாதாரம் காரணமாக இந்த உணவகத்திற்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று கூறபட்டது.

உணவக உபகரணங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்க தவறி விட்டது, மேலும் தயாரிப்பு பகுதியில் கூரைகள் மற்றும் தளங்கள் கூட நல்ல நிலையில் இல்லை. சுகாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை மூடல் உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அடாஃப்சா கூறியது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button