Site icon Tamil Gulf

காரணமின்றி வாகனங்களை நடுரோட்டில் நிறுத்த வேண்டாம்- அபுதாபி காவல்துறை

Abu Dhabi Police announced a security exercise in the capital

அபுதாபி
தகுந்த காரணமின்றி வாகனங்களை நடுரோட்டில் நிறுத்த வேண்டாம் என அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம், சிறிய போக்குவரத்து விபத்துக்கள், வாகனம் பழுதடைதல் அல்லது டயர் வெடிப்பு போன்றவற்றில் ஈடுபடும் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு பாதுகாப்பாக நகர்த்த வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில், வாகன ஓட்டிகள், அபுதாபி காவல்துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதிசெய்து, சாலைத் தடைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் துணை இயக்குநர் பிரிகேடியர் சைஃப் அல் ஜாபி இது தொடர்பாக கூறுகையில், அபுதாபி காவல்துறையின் முக்கிய விஷயம் சாலைப் பாதுகாப்பு. சிறிய விபத்துக்களுக்குப் பிறகு அல்லது டயர் மாற்றங்களின் போது சாலைப் பாதைகளில் வாகனங்களை விட்டுச் செல்வது அதிக விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து அபாயங்களையும் ஏற்படுத்துகின்றது.

போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான பிரச்சாரங்களை ஏற்படுத்தி வருகிறது. சரியான காரணமின்றி சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தினால் 1000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

Exit mobile version