Site icon Tamil Gulf

அபுதாபி: பொது பேருந்து சேவைகளில் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் அறிவிப்பு

6.7 million riders used public transportation during the Eid Al Adha holiday

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அதன் பொது பேருந்து சேவைகளில் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மேம்பாடுகள் நகரம் முழுவதும் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும்.

ITC ஆல் செயல்படுத்தப்படும் மாற்றங்கள் மற்றும் புதிய சேவைகள் பின்வருமாறு:

1. டவுன்டவுண்(downtown) அபுதாபி மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு இடையேயான வழித்தடங்களில், வேகமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், குறைந்த நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் மைல்கல்லை சிறப்பாக அணுகும் வகையில் ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு ஒரு புதிய பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. புதிய நேரடி பேருந்து சேவைகள் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை தொடங்கப்பட்டுள்ளது.

4. அல் பஹியா, அல் ஷஹாமா, அல் ரஹ்பா மற்றும் அல் சம்ஹா ஆகிய இடங்களில் உள்ள பாதைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.

5. பனியாஸில் உள்ள போக்குவரத்து அமைப்பு இப்போது பேருந்து சேவைகளை மேம்படுத்தியுள்ளது.

5. டவுன்டவுண்(downtown) அபுதாபி மற்றும் கலீஃபா சிட்டி இடையே சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version