அமீரக செய்திகள்
உம் அல் குவைனில் உள்ள ஒரு கிடங்கில் பெரிய தீ விபத்து
உம் அல் குவைனில் உள்ள ஒரு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் மதியம் 12.30 மணி வரை, அதிகாரிகள் தீயை அணைக்க போராடினர்.
அமீரகத்தின் அதிகாரப்பூர்வ ஊடக அலுவலகம் பகிர்ந்துள்ள காணொளியில், ஒரு தொழில்துறை மண்டலத்தில் உள்ள பகுதியில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறுவதைக் காணலாம்.
உம் அல் குவைன் குடிமைத் தற்காப்புக் குழுவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் அந்த இடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது, அதன் மேற்கூரைகள் அனைத்தும் உள்வாங்கின. அப்பகுதியில் உள்ள மரங்களும் எரிந்தன.
எப்படி தீப்பிடித்தது மற்றும் அந்த பகுதியில் என்னென்ன பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
#tamilgulf