Site icon Tamil Gulf

ஷார்ஜாவில் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட மலைகளுக்கு மத்தியில் உள்ள ஏரி

A lake in the midst of mountains opened for visitors in Sharjah

குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் இப்போது ஷார்ஜா நகரத்தில் ஒரு புதிய சுற்றுலா பகுதிக்கு செல்லலாம். மக்களுக்கான ஆயக்கட்டு நீர் தேக்கமாக விளங்கும் ஒரு ஏரி, வாரஇறுதியில்திறந்து வைக்கப்பட்டது.

அல் ஹெஃபாய்யா என்று பெயரிடப்பட்ட இந்த நீர்நிலையானது அல் ஹியார் சுரங்கப்பாதைக்குப் பிறகு ஷார்ஜா-கல்பா சாலையில் அமைந்துள்ளது, மேலும் இது எமிரேட்டின் வரவிருக்கும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

3.17 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை வழிச் சாலை ஏரியைச் சூழ்ந்துள்ளது, சுற்றுலாப் பயணிகள் 620 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியுடன், அழகிய காட்சியைக் கண்டு மகிழலாம்.

இந்த ஏரி 132,000 சதுர மீட்டரில் பரவியுள்ளது, மேலும் மலைப்பாங்கான காலநிலைக்கு ஏற்ற புதுமையான கட்டுமான பொருட்கள், உபரி நீர் சேமிப்புக்காக மலைகளையும் ஏரியையும் இணைக்கும் குழாய்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் பள்ளத்தாக்கு ஓடை மேலாண்மை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஏரியின் வளாகத்தில் 495 வழிபாட்டாளர்கள் தங்கக்கூடிய மசூதியும் உள்ளது.

அல் ஹெஃபாய்யா ஏரி திட்டத்தில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள அல் ஹெஃபாய்யா ரெஸ்ட் ஹவுஸ் உள்ளது, இதன் மூலம் ஏரி மற்றும் கல்பாவின் உயரமான மலைகளை நேரடியாகக் காணலாம்,

Exit mobile version