Site icon Tamil Gulf

ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடிய 9 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கம்

28 foreigners deported in Kuwait for environmental violations!

குவைத்:
உத்தரப்பிரதேச மாநிலம் (உ.பி.) அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் இடத்தில் ராமர் கோயில்(Ram Temple) திறப்பு விழாவைக் கொண்டாடிய ஒன்பது இந்தியத் தொழிலாளர்கள் குவைத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனவரி 22, திங்கட்கிழமை “பிரான் பிரதிஷ்டா” அல்லது கும்பாபிஷேக விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்த பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளா நாளிதழான மத்யமம் படி , குவைத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை தங்கள் பணியிடத்தில் இனிப்புகளை விநியோகித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து, முதலாளிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

Exit mobile version