Site icon Tamil Gulf

துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக கடத்த முயன்ற 8.9 கிலோ கஞ்சா பறிமுதல்

Dubai Maritime Customs Centers made 30 major seizures

Dubai:
துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஆசிய பயணி ஒருவர் தனது பையில் மருதாணி எனக்கூறி மறைத்து கஞ்சாவை கடத்த முயன்றார். இருப்பினும், துபாய் சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், துபாய் காவல்துறையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பொது இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

துபாய் சுங்கத்துறை ஆய்வாளர்கள் ஆசிய நாட்டிலிருந்து வந்த விமானத்தின் சாதனங்களை கம்பியூட்டர் சோதனை செய்தபோது குறிப்பிட்ட பையில் சந்தேகம் ஏற்பட்டது. கம்பியூட்டர் படங்கள் பைக்குள் அசாதாரண அடர்த்தியை வெளிப்படுத்தியது. இதனையடுத்து குழப்பத்தின் அறிகுறிகளைக் காட்டிய பயணியின் பையை கைமுறையாக சோதனை செய்தபோது அதில் 8.9 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துபாய் சுங்கத்தின் பயணிகள் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் இப்ராஹிம் அல்-கமலி கூறுகையில், தீங்கு விளைவிக்கும் பொருட்கள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது. துபாய்க்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்றார்.

Exit mobile version