Site icon Tamil Gulf

அல் கைல் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5 புதிய மேம்பாலங்கள்

5 new flyovers to ease traffic congestion on Al Khail Road

துபாயின் அல் கைல் சாலையை மேம்படுத்த 700 மில்லியன் திர்ஹம்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து அல் கைல் சாலையில் பயண நேரம் 30 சதவீதம் குறைக்கப்படும். அல் கைல் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ஐந்து பாலங்கள் கட்டப்படும்.

Zabeel, Meydan, Al Quoz 1, Ghadeer Al Tair மற்றும் Jumeirah Village Circle உள்ளிட்ட பல இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அல் கைல் சாலை துபாயின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும், இது பிசினஸ் பே கிராசிங்கில் இருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலையுடன் அதன் சந்திப்பு வரை நீண்டுள்ளது, ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகளை உள்ளடக்கியது.

Gulf News Tamil

இந்த மேம்பாட்டுத் திட்டம், ஷேக் சயீத், ஷேக் முகமது பின் சயீத் மற்றும் எமிரேட்ஸ் சாலைகளுக்கு இணையான மற்றும் ஆதரவளிக்கும் சாலைகளின் திறனை மேம்படுத்தும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மேட்டர் அல் டேயர் தெரிவித்தார்.

இந்த திட்டம் அல் கைல் சாலையில் ஏழு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும் என்று RTA கூறியது.

Exit mobile version