உலக செய்திகள்
பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் கைபர் பக்துன்க்வாவின் சில பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் இருந்ததாக பாகிஸ்தானின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி காலை 8.17 மணிக்கு (பாகிஸ்தானில் காலை 9.17 மணிக்கு) நிலநடுக்கம் 67.8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
#tamilgulf