Site icon Tamil Gulf

பேனா…!

என் பேனா
எழுத துடிக்கும் கவிதை
நீ என்பேனா…
இல்லை
என் தேன் சுவை பேச்சில்
உன் மழலையை சுவைத்தேன்…
நான் என்பேனா….

என் பேனா
எச்சம் பட்ட காதோரம்
சிலிர்த்தது கவிதை மடலா…
இல்லை
மிச்சம் எழுதுகையில்
என் மீசை பட்டு
சிவந்த உன் காது மடலா…

காகிதத்தாள்
என்னை காதலித்தால்
என்பேனா….
இல்லை
ஒற்றை புள்ளி
மை வைத்த என்னை
மணமுடித்தாள் என்பேனா…

என் பேனா
எழுதிய நெருக்கம்
எனது விருப்பம் என்பேனா…
இல்லை
உன் கரு விழிக்குள்
நம் உரு பதித்த இறுக்கம்
என்பேனா….

இது பேனாவின் பிதற்றல்
காகிதத்தில்

–யுகா

Gulf News Tamil
Exit mobile version