Site icon Tamil Gulf

ஆப்பிள்….!

அவளின்
அதிகாலை தரிசனம்
ஆனந்தமாய்
என் கைகளில் …

அவள்
கன்னத்தில்
விழுந்த நீரை
வலது கையால்
துடைக்கையில்
என் விரல்கள்
வருடத் தான் செய்தன
வஞ்சி அவள் பேரழகை…

அதிகாலை பனித்துளி
அவசர அவசரமாக
சூரியனிடம் சொக்கி
தவிப்பது போல
அவள் என் கைகளில்…

சொக்கி சிவந்த
அவள் கன்னத்தில்
என் இதழ்கள்
எழில் ஓவியம் தீட்டிய
தூரிகை போல் பூரிக்க..

என் முத்து
பற்களை
பதித்த அவள்
வட நாட்டுக்காரியோ இல்லை
வஞ்சி நாட்டு இளவரசியோ இல்லை
நேற்று நான்
.
.
.
.
வாங்கி வந்த
ஆப்பிளுடன் நான்….
-யுகா

Gulf News Tamil
Exit mobile version