Site icon Tamil Gulf

கடவுள்

‘கடவுளெல்லாம் இல்லை’
என்று கத்திச் சொல்லியவரிடம்,

“கடவுள் இருக்காரு
எங்கம்மா கடவுள்கிட்ட தான்
போயிருக்காங்க” என்று
கம்மிய குரலில் சொன்ன
அந்தச் சிறுவனின்
உச்சந்தலையில் கைவைத்து
நகர்வததைத் தவிர,

வேறென்ன செய்ய முடியும்
என்னாலும் உங்களாலும்…!!!

Exit mobile version