Site icon Tamil Gulf

ஹிலாரி சூறாவளியின் தாக்கம்… எமிரேட்ஸ் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!!

hilary hurricane threat

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகம், அமெரிக்காவில் உள்ள குடிமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தூதரகம், “ஹிலாரி” சூறாவளியின் தாக்கம் மழைப் புயல் வடிவில் நீட்டிக்கப்படுவதால் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அமெரிக்காவில் உள்ள நாட்டின் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும், அவசர காலங்களில் 0097180024 அல்லது 0097180044444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exit mobile version