Site icon Tamil Gulf

விமான நிலையத்தில் தூங்கும் போட்களை அறிமுகப்படுத்திய சவுதி அரசு

sleeping pods in saudi airport

ரியாத்
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், விமான பயணிகளுக்காக புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணம் செல்லவுள்ள விமானங்களுக்கு முன் சிறிது ஓய்வு தேவைப்படும் பயணிகளுக்கு தூங்கும் போட்களை வழங்குகிறது என்று சவுதி பிரஸ் ஏஜென்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு 300 பயணிகள் தங்கக்கூடிய வகையில் போட்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனிங், ஹோட்டல் பாணி படுக்கைகள், ஊடாடும் திரைகள் மற்றும் லாக்கர்கள் ஆகிய வசதிகளும் உள்ளன.

சவூதி அரேபியாவில் ஸ்லீப்பிங் போட்ஸ் முதன்முதலில் பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டதில் இருந்து அவை பிரபலமடைந்துள்ளன. அவை இப்போது மருத்துவமனைகள் மற்றும் நிறுவன அலுவலகங்களில் கூட பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அவை விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version