Site icon Tamil Gulf

வானிலை அறிவிப்பு

Gulf News Tamil

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 18 முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். ஓரிரு இடங்களில் இயல்பான அளவில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version