Site icon Tamil Gulf

ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த விராட் கோலி!

india vs srilanka match

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இலங்கை 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில் அடுத்து வந்த கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடினார்.

ரவீந்திர ஜடேஜா வீசிய 26-வது ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய வீரர்கள் அதை கொண்டாட துவங்கிய நிலையில் விராட் கோலி ஓடிவந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கொண்டாடியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

குறிப்பாக கேப்டன்ஷிப் விவாகரத்தில் இருவருக்கும் சண்டை விரிசல் என கடந்த காலங்களில் பலமுறை ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் அதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அதை மேலும் மறுக்கும் வகையில் இந்த தருணம் அமைந்தது என்றே சொல்லலாம். முன்னாள் இந்நாள் கேப்டன்களாக திகழும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் அன்பாக வெற்றியை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version