Site icon Tamil Gulf

மன அழுத்தம் சரியாக.. சில உணவுகள்!!

health tips

இன்றய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம். இந்த மன அழுத்த பிரச்சினையை சில உணவு வகைகள் மூலம் குறைக்க முடியும்.

விட்டமின் பி சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். கொண்டைக்கடலை மற்றும் கீரைகளில் விட்டமின் பி அதிகளவில் நிறைந்துள்ளது எனவே உங்களது டயட்டில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

கேரட் உள்ளிட்ட கடித்து சாப்பிடக்கூடிய காய்கறிகளை சாலட்டாக செய்து சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோன் என்ற வேதிப்பொருள் நல்ல தூக்கத்தை அளித்து மன அமைதி உண்டாக்குகிறது எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் பயன் தரும்.

விட்டமின் சி நிறைந்த உணவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை குறைக்க உதவுகிறது. சிட்ரஸ் பழங்களில் அதிகளவில் விட்டமின் சி உள்ளது.

Exit mobile version