Site icon Tamil Gulf

போதைப்பொருள் கடத்தலை முறியடித்த சவுதி அதிகாரிகள்!

drug smuggling in Saudi Arabia

நஜ்ரான், ஜசான், ஆசிர் மற்றும் தபூக் பகுதியிலும் அல்-ஷர்கியாவிலும் போதைப்பொருள் கடத்தும் முயற்சியை சவுதி அதிகாரிகள் முறியடித்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

சுமார் 37 டன் கட், 472 கிலோ ஹாஷிஸ் மற்றும் 29,572 மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைக் காவல்படையின் பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் மிஸ்ஃபர் அல்-குரைனி தெரிவித்தார்.

கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக முதற்கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அதிகரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Exit mobile version