Site icon Tamil Gulf

புதிய உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் ஒருவர் பாதிப்பு!

new covid-19 case in UK

உலகளவில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே தணிந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) வெள்ளிக்கிழமையன்று கோவிட்-19 மாறுபாடான BA.2.86-ன் முதல் பாதிப்பை பதிவு செய்துள்ளது. சமீப காலத்தில் எந்த பயணங்களும் மேற்கொள்ளாத ஒரு தனிநபரிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கோவிட் நோயை ஏற்படுத்தும் வைரஸின் புதிய மற்றும் உருமாற்றம் அடைந்த வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகக் கூறியது.

இந்த புதிய உருமாறிய கொரோனா வகை இஸ்ரேல், டென்மார்க் மற்றும் அமெரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Exit mobile version