Site icon Tamil Gulf

பாகிஸ்தானில் உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை; சாமானிய மக்கள் பாதிப்பு

petrol and diesel price in uae

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version