Site icon Tamil Gulf

நிலநடுக்கத்தால் பீதி: 10-வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண் பலி

6-magnitude earthquake hits Peru

கொலம்பியாவின் பொகட்டோ என்ற பகுதியில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ரிக்கடர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடியது. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் 10-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தரையில் விழுந்து படுகாயம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Exit mobile version