Site icon Tamil Gulf

நவராத்திரி விரதம் இருக்கும் முறை என்ன? விரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!

news about Navratri

இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் காணப்படுகின்றது. இவ் விரதமானது இந்துக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. நவராத்திரியின் பொருள் என்பது நவ+ராத்திரி என்பன சேர்ந்து உருவானது. அதாவது ஒன்பது இரவுகள் என பொருள் கொள்ளப்படுகின்றது.

தத்துவங்கள்
இந்துக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான நவராத்திரி சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்றது. தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விரதமாகும். கொலு வைக்கும் நிகழ்வானது அனைத்து இடங்களிலும் சக்தி நிறைந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மகிசாசுரன் என்ற அரக்கனை அழித்து உலகத்திற்கு நன்மையை அருளிய சக்தி கஷ்டங்கள், துன்பங்கள், நோய்கள் அனைத்தையும் இல்லாது ஒழிப்பார் என்ற நம்பிக்கையில் வழிபாடு இடம்பெறும்.

நவராத்திரி விரதம் இருக்கும் முறை
நவராத்திரி ஆரம்பிக்கக் கூடிய முதல் தினம் முதல் ஒன்பது நாள் வரை காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும். ஒன்பது நாள் விரதங்களில் தலைமுடி, நகம் போன்றவற்றை வெட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். வீட்டைச் சுத்தமா வைத்து மாமிச உணவுகளைத் தவிர்த்து மனதில் புனிதத்துடன் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

Gulf News Tamil

நவராத்திரி விரதத்தின் நன்மைகள்
வறுமை நீங்கும்: வாழ்க்கையில் வறுமையை நீக்கி செல்வச் செழிப்பினை வழங்கக்கூடிய விரதமாகும்.

கடன் தொல்லை தீரும்: பிறவிக்கடன் மற்றும் பிறரிடம் வாங்கிய கடன் தொல்லைகள் தீரும், பகை தீரும், நமக்கு வெற்றி கிடைக்கும், பக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி, மன நிம்மதி கிடைக்கும்.

நவராத்திரி விரதமானது சிறப்புமிக்க ஒன்பது நாள் விரதம். மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கின்றது. விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பண்டிகையாக கொண்டாடும் விரதமான நவராத்திரி விரதம் இந்துக்களின் புனித, சிறப்பு மிக்க நன்மை தரும் விரதம் ஆகும்.

Exit mobile version