Site icon Tamil Gulf

தேர்தல் எதிரொலி… பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை!

Gulf News Tamil

2023-ம் ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள டெல்லியில் இன்று மாலை பா.ஜனதா மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டதையடுத்து இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gulf News Tamil

இந்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பா.ஜனதா 5 மாநில தேர்தலில் தீவிர கவனம் செலுத்துகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய இடங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version