Site icon Tamil Gulf

திருடப்பட்ட 125,000 திர்ஹம்கள் கொண்ட பை மூன்று மணி நேரத்திற்குள் மீட்பு

Stolen money returns to owner within 3 hours

அஜ்மான்
அஜ்மானின் அல் ரஷிதியா பகுதியை சேர்ந்த ஆசிய நாட்டவரான ஒருவர் 125,000 திர்ஹம்கள் கொண்ட பை திருடு போனதாக காவல்துறைக்கு புகார் அளித்த மூன்று மணி நேரத்திற்குள் பையை திரும்ப பெற்றுள்ளார்.

நகரின் விரிவான காவல் நிலையத்தின் தலைவரான கர்னல் கைத் கலீஃபா அல் காபி, ஆசிய நபர் ஒருவரிடமிருந்து அவரது தனிப்பட்ட பை திருடப்பட்டதாகவும், அதற்குள் பணம், வங்கி அட்டைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இருந்ததாகவும் செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது என்று தெரிவித்தார்

தகவலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறுகையில், வேலை முடிந்து திரும்பிய பிறகு, அவர் வசிக்கும் கட்டிடத்தின் பார்க்கிங்கில் காரின் முன்புறத்தில் தனது பையை வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறினார். திரும்பி வந்து பார்த்தபோது பையை காணாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் குழு அமைக்கப்பட்டது, அவர்கள் குற்றவாளியை அடையாளம் காணவும், அவர் வசிக்கும் இடத்தை தீர்மானிக்கவும், அவரைக் கைது செய்யவும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடைமைகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அதன்பேரில் சந்தேக நபர் 3 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , காரில் இருந்த பையை கண்டுபிடித்து திருடியதாக கூறினார்.

காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையை கர்னல் அல் காபி பாராட்டினார், எந்தவொரு குற்றத்தையும் அல்லது சட்டத்தால் தண்டிக்கப்படும் பிற மீறல்களையும் செய்யும் நபரை புகாரளிக்க தயங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Exit mobile version