Site icon Tamil Gulf

டோர்னாடோ போர் விமானம் விபத்துக்குள்ளானதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

aircraft accident in saudi arabia

ரியாத்
கிழக்கு மாகாணத்தில் பயிற்சிப் பணியின் போது டோர்னாடோ போர் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதன் பணியாளர்கள் உயிர் தப்பியதாகவும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தஹ்ரானில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் விமானப்படை தளத்தின் பயிற்சிப் பகுதியில் வழக்கமான பணியின் போது திங்கள்கிழமை மாலை 3:44 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

விபத்தின் விளைவாக தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பணியாளர்கள் உயிர் தப்பினர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version