Site icon Tamil Gulf

சாலை விபத்தில் சிக்கி கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி; 27 பேர் படுகாயம்

road accident in brazil

பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் திரண்டனர். போட்டி முடிந்ததும் பேருந்தில் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். அந்த பேருந்தில் 40 ரசிகர்கள் பயணம் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Exit mobile version