Site icon Tamil Gulf

சாலைகளில் திடீரென வளைந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம்

Sudden swerving punishable by Dh1,000 fine in Abu Dhabi

அபுதாபி
சாலைகளில் திடீரென வளைந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபுதாபி காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது, இது கடுமையான போக்குவரத்து விபத்துகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில், அபராதம் குறித்த தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துச் சட்டம் எண். 178 -ன் திருத்தப்பட்ட நிர்வாக விதிமுறைகளின் பிரிவு எண். 86 இன் படி, இலகுரக வாகனங்கள் கட்டாயப் பாதையைக் கடைப்பிடிக்கத் தவறினால், 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். சட்டப்பிரிவு 29-ன் படி, திடீரென வாகனத்தை வளைப்பதற்காக நான்கு போக்குவரத்து கருப்பு புள்ளிகளுடன் 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம் ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், திடீர் விலகல்கள் மற்றும் முறையற்ற முந்திச் செல்வது போன்ற அவசர நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version