Site icon Tamil Gulf

சவூதி அரேபியாவுடன் இந்தியா டிஜிட்டல் ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

India and Saudi Arabia in G20

சவூதி அரேபியாவுடனான இந்தியாவின் டிஜிட்டல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இரு நாடுகள் இடையேயான உறவுகளை மேலும் மேம்படுத்தும் மற்றும் நாட்டின் வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று கடந்த வாரம் இரு நாடுகளும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நிபுணர்கள் தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹா மற்றும் இந்தியாவின் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம், இ-ஹெல்த் மற்றும் இ-லெர்னிங் உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பில் சவுதி-இந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க செய்யும், மேலும் ராஜ்யத்தின் விஷன் 2030 இன் படி, டிஜிட்டல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. .

இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சி லட்சியங்களையும், அவர்கள் எவ்வாறு ஒன்றாக தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்பதையும் குறிக்கிறது என்று இந்திய உலக விவகார கவுன்சிலின் ஆராய்ச்சியாளர் டாக்டர் லக்ஷ்மி பிரியா கூறினார்.

Exit mobile version