Site icon Tamil Gulf

சவுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்ற பாகிஸ்தானியர் உட்பட 6 பேர் கைது

6 persons arrested for drug smuggling

சவுதி அரேபிய அதிகாரிகள் சட்டவிரோதமாக போதைப்பொருள்களை விற்ற பலரை கைது செய்துள்ளது.

நஜ்ரான் பகுதியில் உள்ள போதைப்பொருள் வீட்டில் ஹாஷிஸ் மற்றும் ஆம்பெடமைன்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து குடிமக்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, ​​துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கையடக்கத் தொலைபேசிகள், மாத்திரைகள், கணிசமான பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ரியாத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் மெத்தாம்பேட்டமைன் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானியர் ஒருவரை கைது செய்தது. அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிரான பூர்வாங்க சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு அவர்களின் வழக்குகள் அரசு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான கடத்தல் அல்லது பிற மீறல்கள் குறித்து பொதுமக்கள் 1910@zatca.gov.sa என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நாட்டிற்குள் இருந்து 1910 என்ற எண்ணையோ அல்லது வெளிநாடுகளில் இருந்து +966114208417 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றத்தை கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு நிதி வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.

Exit mobile version