Site icon Tamil Gulf

கேழ்வரகு மில்க் ஷேக்

Gulf News Tamil

சத்தான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் செய்வது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 50 கிராம் பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4 பேரீச்சை – 5 காய்ச்சியப் பால் – 200 மி.கி ஏலப்பொடி – 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

செய்முறை
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும். அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

Exit mobile version