Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை: இன்று மழை பெய்ய வாய்ப்பு

Chance of rain in some areas this afternoon

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மேற்குப் பகுதிகளில் சில வெப்பச்சலன மேகங்கள் உருவாகுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை மேற்குப் பகுதிகள் ஈரப்பதத்துடன் இருக்கும். லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி மற்றும் மணல் வீசும்.

அபுதாபியில் 22°C முதல் 35°C வரையிலும், துபாயில் 24°C மற்றும் 35°C வரையிலும் வெப்பநிலை இருக்கும்.

அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சிறிது முதல் மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.

Exit mobile version