Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச ப்ரோகிராம்மிங் தினம் குறித்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட யுனெஸ்கோ

Unesco accepts Emirati proposal, marks October 29 as International Day of Programming

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், யுனெஸ்கோ ஒரு எமிராட்டி திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதி சர்வதேச ப்ரோகிராம்மிங் தினமாகக் குறிக்கப்படும் என்றும், மார்ச் 19 ஆம் தேதி டிஜிட்டல் கல்விக்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் என்றும் UAE தலைவர் X ல் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.

ஷேக் முகமது தனது ட்வீட்டில் கூறியுள்ளதாவது:- “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு புதிய உலகளாவிய முயற்சியில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ம் தேதியை (துபாய் இன்டர்நெட் சிட்டியை நாங்கள் தொடங்கிய நாள்) சர்வதேச ப்ரோகிராம்மிங் தினமாக கொண்டாட யுனெஸ்கோ ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் மார்ச் 19-ம் தேதி டிஜிட்டல் கல்விக்கான சர்வதேச தினமாகும்.”

அவர் மேலும் கூறியதாவது:- “ப்ரோகிராம்மிங் ஒரு அடிப்படை மையமாக மாறியுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கல்வி அறிவியல் வளர்ச்சியில் ஒரு அடிப்படை அச்சாக உள்ளது… மேலும் மனித குலத்திற்கு பயனளிக்கும் சிறந்த கருவிகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுவதில் UAE ஒரு அடிப்படை அச்சாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

Exit mobile version