Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்றைய வானிலை குறித்த முக்கிய தகவல்

today weather in UAE

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்றைய வானிலை குறித்த தகவலை தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில சமயங்களில் தூசி காற்று வீசும். மழையுடன் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. நாட்டில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். இருப்பினும், குறைந்தப்பட்ச வெப்பநிலை அபுதாபியில் 31ºC ஆகவும், துபாயில் 29ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 24ºC ஆகவும் இருக்கும்.

சில கடலோரப் பகுதிகளில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஈரப்பதத்துடன் இருக்கும். அபுதாபியில் 30 முதல் 80 சதவீதம் மற்றும் துபாயில் 30 முதல் 85 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும். அரேபிய வளைகுடாவில் கடலின் நிலை மிதமாகவும், ஓமன் கடலில் சற்று மிதமாகவும் இருக்கும்.

Exit mobile version