Site icon Tamil Gulf

எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம்

Falcon auction in Abu Dhabi

அபுதாபியில் எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது.

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி சர்வதேச கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றன. அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பல்வேறு பருந்துகள் இடம்பெற்றிருந்தன. அவை ஏலம் எடுப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்தவகையில், அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டாலருக்கு ஏலம் போய் உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 76-க்கு ஏலம் போனது. இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

Exit mobile version