Site icon Tamil Gulf

உலக கோப்பை செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்… போராடி வீழ்ந்த பிரக்ஞானந்தா!

world chess championship

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன. இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

Exit mobile version