Site icon Tamil Gulf

ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பெரும் பரபரப்பு

flight crash in Karnataka

கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம், கர்நாடகா மாநில சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.

ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதைக் காண கிராம மக்கள் குவிந்தனர். சிதைந்த பாகங்களை யாரும் எடுக்காமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது.

மேலும் விபத்துக்குக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version