Site icon Tamil Gulf

அரபு ஊடக மன்றத்தின் 21வது பதிப்பு துவங்கியது!

Arab Media Forum kicks off in Dubai

அரபு ஊடக மன்றத்தின் 21வது பதிப்பு செப்டம்பர் 26 (நேற்று) மதீனத் ஜுமைராவில் ஆரம்பமானது. துபாயின் துணைத் தலைவரும், பிரதமரும், ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறும்.

இந்த இரண்டு நாள் நிகழ்வில் செல்வாக்கு மிக்க ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் உள்ளூர், அரபு மற்றும் முன்னணி தலைவர்கள், சர்வதேச ஊடக நிறுவனங்கள், சிந்தனைத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பங்கேற்பாளர்கள் ஒன்றிணைவார்கள்.

130 பேச்சாளர்கள் பங்கேற்கும் 75 அமர்வுகள் மற்றும் 160 ஊடக நிறுவனங்களின் பங்கேற்புடன், அதிநவீன ஊடகப் போக்குகளை ஆராய்வதற்கும், அரபு உலக ஊடகங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய பார்வையைப் பற்றி விவாதிப்பதற்கும் மன்றம் சாட்சியாக இருக்கும்.

Exit mobile version