Site icon Tamil Gulf

அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை 25°C முதல் 35° வரை இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

uae weather report

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பை தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ளது. அதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும். கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவைக் கொண்டுவரும் வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை 25°C முதல் 35° வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை ஈரப்பதமாக இருக்கும்.

லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சிறிது சிறிதாக இருக்கும். இவ்வாறு வானிலை அறிக்கை அறிவித்துள்ளது.

Exit mobile version