Site icon Tamil Gulf

அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்!

uae president arrives in ethiopia

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா வந்தடைந்தார். அவர் போலே அடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், அவரை எத்தியோப்பியாவின் பிரதமர் டாக்டர் அபி அஹ்மத் வரவேற்றார்.

ஜனாதிபதியின் வருகை எத்தியோப்பியாவிற்கு பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்தும்.

இந்த பயணத்தின் போது, ​​விவசாயம், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் மற்றும் அவர்களுடன் வரும் தூதுக்குழு எத்தியோப்பியா தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஷேக் முகமதுவுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடத்தப்பட்டது, இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இடம்பெற்றன, அவரது வருகைக்கு மரியாதையை செலுத்தும் வகையில் 21 பீரங்கி குண்டுகள் முழங்கி சல்யூட் செய்யப்பட்டது.

Exit mobile version