ஹலால் அல்லாத உணவை விற்பனை செய்த உணவகம் மூடல்- அதிகாரிகள் நடவடிக்கை

அபுதாபியில் ஹலால் அல்லாத உணவை விற்பனை செய்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அபுதாபி விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Adafsa), முசாபா பகுதியில் அமைந்துள்ள பிராட் மணிலா உணவகத்தை நிர்வாக ரீதியாக மூடுவதற்கான முடிவை வெளியிட்டுள்ளது.
இந்த உணவகம் அபுதாபி எமிரேட்டில் உணவு தொடர்பான சட்ட எண் (2) 2008 மற்றும் அதனுடன் இணைந்த சட்டத்தை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதன் நடைமுறைகள் பொது சுகாதாரத்திற்கு அதிகளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உணவகம் ஹலால் அல்லாத உணவுகளை விற்பனை செய்வதற்கு தேவையான அனுமதிகளைப் பெற்று, முழு வளாகத்தையும் நன்கு கிருமி நீக்கம் செய்தபின் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்” என்று அடாஃப்சா கூறியுள்ளது.
அபுதாபியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் வழக்கமான மதிப்பீடுகளுக்கு உட்பட்டவை. எந்தவொரு உணவு நிறுவனத்திலும் ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால் கட்டணமில்லா 800555 எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அடாஃப்சா தெரிவித்துள்ளது.