ஹரிப் கலீஃபா பின் ஹாதர் அல் முஹைரி காலமானார்… இரங்கல் தெரிவித்த துபாய் ஆட்சியாளர்!

எமிராட்டி ஹரிப் கலீஃபா பின் ஹாதர் அல் முஹைரி வியாழன் அன்று காலமானார். மறைந்த அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இரங்கலைத் தெரிவித்தார்.
ஷேக் முகமது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, மறைந்த எமிராட்டியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தார். மேலும், அவரது குடும்பத்தினர் தங்கள் துக்கத்தின் தருணத்தில் வலிமையையும் ஆறுதலையும் பெற வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் அகமது பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் அல் முஹைரியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.