இந்தியா செய்திகள்சிறப்பு செய்திகள்
விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியாகியது!

‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 15-ந்தேதி லேண்டர் நிலை கண்டறியும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் நேற்று லேண்டர் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
#tamilgulf