ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் தோல்வி… நிலவில் விழுந்த லூனா-25 விண்கலம்!

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியதால், 47 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் தோல்வியடைந்துள்ளது.
லூனா-25 விண்கலம் நேற்று தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல் சிறிது நேரத்திலேயே, விண்கலத்துடனான தொடர்பை இழந்தது என்று ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
“கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் விண்கலம் நகர்ந்தது மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் மோதியதன் விளைவாக நிறுத்தப்பட்டது” என்றும் ரோஸ்கோஸ்மோஸ் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வாரம் சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவுக்கு எதிராக ரஷ்யா பந்தயத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.