அமீரக செய்திகள்வளைகுடா செய்திகள்
மூவர்ணக் கொடி நிறத்தில் மின்னிய புர்ஜ் கலீஃபா!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களும் அவர்கள் இருக்கும் நாடுகளில் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா மூவர்ணக் கொடியின் நிறத்தில் மின்னியது. இந்த வீடியோவை புர்ஜ் கலீஃபா அதன் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
புர்ஜ் கலீஃபாவானது ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளின் சிறப்பான தினத்தில் அந்தந்த நாடுகளின் தேசிய கொடி நிறத்தில் ஒளிரும். அந்த வகையில் நேற்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியில் ஒளிர்ந்து, சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.
#tamilgulf