முதலீட்டு வாய்ப்புகள் குறித்து போலியான பதிவுகள் – சாலிக் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை விடுப்பு

சாலிக் பங்குகளில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களைக் கேட்டு கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு போலி பதிவுகள் பரவி வருகின்றன. இந்நிலையில், துபாயின் டோல் கேட் ஆபரேட்டர் சாலிக் நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுமாறு முதலீட்டாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.
சாலிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இப்ராஹிம் அல் ஹடாத் இதுபற்று கூறுகையில், “சாலிக் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ சேனல்களைப் பயன்படுத்தவும், போலியான சமூக ஊடக பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.
துபாய் நிதிச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, டோல் கேட் ஆபரேட்டர் கடந்த ஆண்டு அதன் ஆரம்ப பொதுப் பங்கீடு (ஐபிஓ) 184.2 பில்லியன் ($50.2 பில்லியன்) என்ற சாதனையைப் பெற்ற பிறகு, Dh3.735 பில்லியன் ($1.017 பில்லியன்) திரட்டியது. கடந்த ஆண்டு துபாய் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து சாலிக் பங்குகள் சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாய் பங்குச்சந்தையில் அதன் பங்குகள் மிகவும் சுறுசுறுப்பாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
“சமூக ஊடக பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். மக்கள் அவற்றைத் தவிர்த்து, சட்டப்பூர்வ வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தக் கணக்குகளில் உங்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம், ஏனெனில் இவை போலியான கணக்குகள் மற்றும் நாட்டிற்கு வெளியில் இருந்து இயக்கப்படுகின்றன,” என்று அல் ஹடாத் கூறினார்.